அப்பா எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?

By Mini Cini

50.60களில் திரையுலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன் என்பது எல்லோருக்கும் தெரியும். 90களில் கார்த்திக்குக்கு இருந்தது போல 60களில் ஜெமினி கணேசனுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் காதல் காட்சிகள் கொண்ட படமாகவே இருக்கும்.

60களில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் இவர்தான். சினிமாவில் மட்டுமில்லை. நிஜ வாழ்விலும் இவர் காதல் மன்னன்தான். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்திருந்த நிலையிலும் சாவித்ரியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதை அவர் பகீரங்கமாக அறிவிக்கவில்லை. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தனர்.

சாவித்திரி சொந்த படம் எடுத்து, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நலம் பாதித்து படுக்கையில் கிடந்தபோது அவரை பராமரித்தவர் ஜெமினி கணேசன்தான். ஆனால், சாவித்ரியை ஏமாற்றி அவர் கைவிட்டுவிட்டதாகவும், சாவித்ரிக்கு அவர் நேர்மையாக இல்லை எனவும், அவருக்கும், சாவித்திரிக்கும் பிறந்த குழந்தைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் பலரும் நினைப்பார்கள். ஆனால், அதில் உண்மையில்லை.

இதுபற்றி சாவித்ரியின் மகன் சதீஷ் குமார் பத்திரிக்கை ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பேசியபோது ‘நான் படிப்பதற்காக பெங்களூர் சென்றபோது கூட என் பிரிவை தாங்க முடியாமல் இருந்தவர்தான் என் அப்பா. நான் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவன். அப்படிப்பட்ட என்னை அவரின் ஆச்சாரமான குடும்பம் சுலபமாக அங்கீகரித்துக்கொண்டார்கள். அந்த வீட்டில் இருந்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நான் இந்த சினிமா உலகை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாகேஷ், கமல்ஹாசன், நம்பியார் என பலரின் வீட்டுக்கும் என்னை அழைத்து சென்றிருக்கிறார் என் அப்பா.

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெமினி கணேசன் எனும் அந்த மகா கலைஞனின் மகனாக பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என சொல்லியிருக்கிறார் சதீஷ்.

.
மேலும்