வயதான தோற்றத்தில் நடிகர் கார்த்தி - வைரலாகும் புகைப்படம்

By Senthil

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா தயாரிக்க கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி கைதி 2 மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடிக்கிறார். சர்தார் திரைப்படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இளமையான வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வயது முதிர்ந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

.
மேலும்