நடிகர் மோகனலால், பழங்குடி மாணவர்கள் 20 பேரின், 15 வருடக் கல்விச் செலவை ஏற்கிறார்

By Senthil

பிரபல நடிகர் மோகன்லால், மலையாளம், தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். இவர் தனது பெற்றோரின் பெயரில் விஸ்வ சாந்தி அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் 20 பழங்குடி மாணவர்களின் 15 வருட கல்வி செலவை மோகன்லாலில் இந்த அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது. பழங்குடி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படும் இதற்கு, ‘வின்டேஜ் திட்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

முதன்முதலாக, தமிழர்களும் வசிக்கும் அட்டப்பாடியில் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. விஸ்வசாந்தி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் வி. நாராயணன் இதைத் தொடங்கி வச்சார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஆறாம் வகுப்பு மாணவர்களின் திறமை மற்றும் கற்றல் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு ஆர்வ முள்ள துறைகளில் முன்னேற்ற, இந்த திட்டம் வழிவகுக்கும். 15 வருடங்களுக்கான கல்வித் தொகையையும் இந்த அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். இதன் ஒரு பகுதியாக அட்டப்பாடி மாணவர் களின் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் வகுப்பு அங்கு நடத்தப்பட்டிருக்குது.

இதுபற்றிய தகவலை மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மாணவர்களுக்கு உங்கள் ஆசிகள் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.
மேலும்