தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டப் பணிகளுக்கு தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று (17/05/2021) சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை வழங்கினார். அதேபோல், நடிகர் விக்ரம் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வங்கிப் பரிவர்த்தனை மூலமாக ரூபாய் 30 லட்சம் வழங்கியுள்ளார்.