சூரியின் நடிப்பில் கருடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

By News Room

சூரியின் நடிப்பில் வெற்றிமாறன் கதைகளத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள கருடன் வெற்றிப்பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

வளர்ச்சின்னா இப்படி இருக்கனும். சூரியின் வளர்ச்சி உண்மையில் பிரமிக்க வைக்கிறது வளர்ச்சின்னா இதுதான் வளர்ச்சி.

 எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்து வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டா சூரியாக வந்து குள்ளநரி கூட்டம், ரஜினிமுருகன் என பல படங்களில் காமெடியனாக நடித்து பிறகு வெற்றிமாறன் கையில் சிக்கி விடுதலை எனும் படத்தில் கதாநாயகனாக வந்து அசத்தி இப்ப கருடனாக வான் உச்சியில் பறந்து கொண்டிருக்கும்  மதுரை மண்ணின் மைந்தனுக்கு தஞ்சை தரணியில் இருந்து இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இன்னும் பல வெற்றிப்படங்களை காண வேண்டும் காணுவார் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உண்மையில் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இவரது இந்த அசூர வளர்ச்சியை பார்க்கும் போது. சில நடிகர்களை நாம் பார்த்திருப்போம் சும்மா லக்குல நடிகராயிட்டான் நாம சொல்லுவோம் சொல்லியிருப்போம் ஆனால்  சூரி அவர்களை சொல்ல முடியல ஏன்னா இவரது ஆரம்பல காலம் அத்தனை கஷ்டமானது.  இப்படிங்குறதுக்குள்ள அவர் மேல வரல சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சு அதன் பிறகு படிப்படியா மேல வந்திருக்கிறார்.

மீண்டும்...மீண்டும் .. எனது வாழ்த்துக்கள்..  கண்படப்போகுது திருஷ்டி சுத்திப்போடனும் அவங்க வீட்டில் உள்ளவர்கள்.  வெற்றிமாறன் கதை என்றால் சொல்லவா வேணும் நல்லா இருக்கும்.

#கருடன் #நடிகர்சூரி #வாழ்த்துக்கள் #trendingnow. #சிறகுகள் #writersoffacebook #tamil #tamilcinema #Srichandra #madurai #maduraikaran

.
மேலும்