நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் ஆதரவைப்பெற்று வெற்றி நடைபோடும் படம் வலிமை.
இப்படத்தின் ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் நடனம் ஆடியும் கட்-அவுட் வைத்தும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலர் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், வலிமை படத்தை பார்த்த நடிகை குஷ்பூ படத்தையும் அஜித்தையும் பாராட்டியுள்ளார். இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "தல உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது" எனக் குறிப்பிட்டுள்ளார்.