அந்தக் காட்சியில் நடித்துவிட்டு அழுதேன்?

By Mini Cini

2003-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் ரீமேக்கான ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சதா.  மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ’ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக நடிகை சதா, அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் நடித்ததற்காக தான் வேதனைப்படுவதாக கூறியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சதா. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த சதா, 2003-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் ரீமேக்கான ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமான ஜெயம் ரவிக்கு தமிழில் நாயகியாக என்ட்ரி ஆன சதாவுக்கும் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, அஜித், விக்ரம், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சதா, கடைசியாக தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான டார்ச்லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சதா சமீபத்தில் தெலுங்கில் வெளியான அகிம்சா என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சதா தனது சினிமா அனுபவங்கள் மற்றும் திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இதில் தேஜா படத்தில் ஒரு காட்சியில் மோசமாக நடித்தது குறித்து வருத்தப்படுவதாக கூறிய நடிகை சதா, ஜெயம் படத்தில், வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்த் என் கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதுபோன்ற காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று இயக்குனரிடம் சொன்னேன். ஆனால் அந்த காட்சி கதைக்கு தேவை என்று சொல்லி நடிக்க வைத்தார். அந்த காட்சி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று அழுதேன். இந்த காட்சியை இப்போது நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நன்றி: தமிழச்சி கயல்விழி

.
மேலும்