முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரிஷா

By Senthil

தமிழ்த்திரையுலகில் சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து இன்றளவும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் தான் நடிகை திரிஷா. இவர் திரையுலகிற்கு வந்து  20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது, இவர் முதன் முறையாக தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. 

காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன்  படப்பிடிப்பு தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

.
மேலும்