நடிகை நயன்தாரா சமீபத்தில் நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தினை ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குள்ளார். இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்துள்ளனர். நயன்தாரா. ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு ஜெய் - சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
தமன் இசையில் அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் தற்போது வைராகி வருகிறது.