ஏ.ஆர். ரகுமான் தனது மகள் திருமணப் புகைப்படத்தை வெளியிட்டார் 

By Senthil

ஏ.ஆர். ரகுமானின் மகள் கதிஜா ரகுமான்-ரியாசுதீன் சேக் திருமணம் சென்னையில் எவ்வித ஆடம்பரமின்றி மிக எளிமையாக நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிக்கு பின் மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் எனவும், அனைவரது அன்பிற்கும் முன்கூட்டியே நன்றி எனவும் குறிப்பிட்டார். தாயார் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளதோடு, புதுமண தம்பதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

.
மேலும்