பேரழகி சில்க் சுமிதா

By Mini Cini

திரைப்பட உலகில் தென்னிந்தியாவில் பேசப்படும் ஆளுமையாக சில்க் திகழ்ந்தார் ஆந்திரத்திலிருந்து கரையை கடந்து தமிழகம் வந்த இந்த 'கவர்ச்சி புயல்' ஒருபோதும் கரையை கடக்க நம் மக்கள் விட்டதே இல்லை..

போனியாகாமல் பெட்டியில் தூங்கி கொண்டிருந்த பல படங்களில் இவரது ஒரே ஒரு பாட்டை இணைத்து காசை அள்ளிய கூட்டமும் அதிசயமும் அன்று நடந்தது..தவிர்க்கவே முடியாத தேவையானார் சில்க் ஸ்மிதா.

கடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஆப்பிள் துண்டு முதல், சில்க் உட்கார்ந்த சேர் வரை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைபோயின.. சில்க் போட்டோவை வைத்து எத்தனையோ வார பத்திரிகைகள் பிழைத்தன..

ஒருமுறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது... 'ஒரு பேரழகிங்கிறதை தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்?!!'

தன் அகத்தை யாராவது விரும்பி ஏற்று கொள்வார்களா என்ற ஏக்கத்திலேயேதான் இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன.. வலி நிறைந்த வாழ்க்கையின் மீது, பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும்,

பழிகள், காயங்கள் எல்லை மீறிய சூழலிலும்தான் அப்படி ஒரு சோக முடிவை எடுத்திருப்பார் போலும்!!

கல்யாணம், குழந்தை குட்டியுடன் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.. அதுவும் ஈடேறவில்லை.. கடைசியில் அவர் ஆசைப்படாத மரணம் 35 வயதிலேயே இழுத்து கொண்டு போய்விட்டது.. அதன் மர்ம முடிச்சுகளை இன்னும் யாராலும் அவிழ்க்க முடியவில்லை

.
மேலும்