இது போலந்து நாட்டு படம். இசையில் ஆர்வம் உள்ள ஒரு பாடகிக்கும் - மியூசிக் கம்போசருக்கும் உள்ள ஒரு நீண்ட காதல் கதை கிட்டத்தட்ட படம் 1949லிருந்து 1965 வரை இந்த காதல் கதை தொடர்கிறது.. இரண்டாம் உலகப் போருக்கு பின் போலந்து நாட்டு கம்யூனிஸ்ட் அரசு ஒரு இசைக்குழுவை உருவாக்குகிறது.
அதற்கான குழுவில் இந்த கம்போசர் இருக்கிறார். கிராமங்களில் சென்று இதற்கானவர்களை தேர்வு செய்கின்றனர்.
பிரமானமான பாடகர்கள், டான்சர்கள் இன்னும் எவ்வளவோ...
இறுதியில் ஒரு குழுவை உருவாக்குகிறார்கள். அப்போது அவர் தேர்ந்தெடுக்கும் ஒரு பாடகிதான் படத்தின் ஹீரோயின். பார்த்த முதல் பார்வையிலே அவளிடம் காதல் கொள்கிறார் கம்போசர்.
இதற்கிடையில் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் இசைக்குழுவை அரசியல் பிரச்சார பாடல்களை பாடுமாறு உருவாக்குகிறது. வெறும் காதல் பாடல்கள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த குழுவினர் அரசு பிரச்சார இயந்திரமாக மாறிவிடுகிறது. இதன் விளைவாக கம்போஸர் இந்த குழுவை விட்டு பிரிகிறார். பாடகில் உலகப் புகழ் பெறுகிறார். ஐரோப்பா முழுவதும் இந்த இசைக்குழு நிகழ்ச்சிகள் நடத்துகிறது. கம்போசர் ஒருமுறை பாரிசில் நடக்கும் இசை நிகழ்ச்சியின் போது அவளை சந்திக்கிறார். பிறகு பாடகி போலந்துக்கே திரும்பி விடுகிறாள்.
அவளை தேடி போலந்து வரும் கம்போசரை கைது செய்கிறது ராணுவம், ஏனென்றால் அவர் போல்ந்து குடியிரிமை இல்லாமல் பாரிசில் இருக்கும் போது பிரெஞ்சு குடியுரிமை பெற்றது தான் காரணம் என்கின்றனர்.
விளைவு 15 வருட தண்டனை. சிறையில் இருக்கும் அவரை சந்திக்க வருகிறாள் பாடகி. பிறகு பெரும் முயற்சி எடுத்து அவரை 1965- ல் வெளியே கொண்டு வருகிறார்.
ஆனால் இருவரும் ஒன்றாக மரணத்தை தழுவுகிறார்கள்.
இயக்குநர் இந்தப் படத்தை தன் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறார்.
நன்றி: ராஜேந்திரன்