இயக்குநர் சேரன் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி திருமணம்

By News Room

இயக்குநர் சேரன் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்துள்ளவர் இயக்குநர் சேரன்.  யதார்த்தமான உயிரோட்டம் கொண்ட அவரின் படைப்புகள் ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது. 

 

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், புரியாத புதிர், நாட்டாமை, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில்  பணிபுரிந்தார்.  1997ஆம் ஆண்டு 'பாரதி கண்ணம்மா' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், பல வெற்றி படங்களை இயக்கியும், அதில் நடித்தும் வருகிறார். 

இந்நிலையில் இயக்குநர் சேரன் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யாவுக்கும் சென்னை மயிலாப்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவை கே.எஸ். ரவிக்குமார், பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தி வைத்தனர். மேலும் சமுத்திரக்கனி, சிம்பு தேவன், பாண்டிராஜ் மற்றும் பல திரைபிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  

 

மேலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் திருமணத்திற்கு வருகை தந்து மனப்பூர்வமாக வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேரன் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

.
மேலும்