தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சியில் பணி - திவ்யா சத்யராஜ்

By News Room

தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

சத்யராஜ் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். 

 

ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைவதில் விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை. எந்த கட்சியுடன் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என தெரிவித்தார்.

.
மேலும்