அஜித்துக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

By Senthil

நடிகர் அஜித் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. 

கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இந்நிலையில் அஜித்துக்கு, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதில், நடிகர் அஜித்குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

.
மேலும்