நிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா!

By Mini Cini

பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிதி அகர்வால், தமிழில் ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ படங்களில் நடித்துள்ளார். இந்த 2 படங்களும் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இதில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் கலக்குகிறார்.

அதுவும் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே மூன்று படங்களில் நடிப்பது கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் என்கிறார் நிதி. அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வரும் படம் த்ரில்லர் கேரக்டராம். பாலிவுட்டில் நான் அறிமுகமானாலும், தமிழ் படம் பக்கம்தான் என் கவனம் என்றார்.

என்னை பொறுத்தவரை பாலிவுட்டைவிட தமிழ்சினிமாதான் நம்பர் ஒன். தமிழில் வெளியான படம்தான் இந்தியில் ரீமேக் ஆகிறது. மணிரத்னம், வெற்றிமாறன், ஷங்கர் போன்றவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள் என்றார் நிதி அகர்வால்.

.
மேலும்