வரும் 8-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்துச் செய்யப்படுவதாக பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது.

By Senthil

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில். ``வரும் 8-ம் தேதி நடிகர் சங்கப் பொதுக்குழு நடைபெறுகிறது. அதில் அனைத்து நடிகர்களும் கலந்துகொள்ளும் விதமாக, அன்று படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று நடிகர் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்று வரும் 8-ம் தேதி படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

அடுத்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகச் சிலர் சொன்னார்கள். எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை. இருந்தாலும் இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவரிடம் பேசினோம். அவர் நாளை (அதாவது இன்று )காலையில் இரு அமைப்புகளும் சேர்ந்து பேசி முடிவு செய்வோம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று அந்த அறிக்கையின் மேல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்'' என்று கூறினார்.

.
மேலும்