நிவின் பாலி-அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

By Senthil

‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார்.

தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தயாரிப்பாளர் – சுரேஷ் காமாட்சி, எழுத்து, இயக்கம் – ராம், இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், மக்கள் தொடர்பு – A.ஜான்.

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன் பிறகு கேரளாவில் வண்டிப் பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.ஆர். ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கை வண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென ஒரு நாள் விசிட் அடித்த இயக்குநர் மிஷ்கின், இந்த செட்டை பார்த்து வியந்துபோய் உமேஷின் கலை நயத்தை பாராட்டினார்.

ஏ.ஆர்.ஆர். ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது.

விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்பட உள்ளன.

.
மேலும்