கணிசமான கவனம்பெற்ற FINDER திரைப்படத்தின் கலைக் குழுவினர் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் தலைமையில் வீட்டுக்கு வந்து வாழ்த்துப் பெற்றனர்; பாட்டு வரிகள் படத்திற்கு பலம் என்றனர்
வெற்றிகள் அரிதாகிப்போன சூழலில் சிறிதாகிய வெற்றியும் பெரிதாகத் தோற்றுகிறது.
ஒவ்வொருவரையும் வாழ்த்தினேன் 'அடுத்த படத்திற்கேனும் தமிழில் தலைப்புவைக்க வேண்டும் தம்பி' என்றேன்
'அப்படியே செய்வேன் ஐயா' என்றார் இயக்குநர். இந்த நிகழ்ச்சியில் நான் அடைந்த பெருமகிழ்ச்சி அதுதான்.