Glory லெஸ்பியன் உறவு பற்றிய திரைப்படம்!

By News Room

கோவா 2013 திரைப்பட விழா இன்றுடன் முடிகிறது.  படங்கள் சுமார் தான். வழக்கம்போல போஸ்னியா, செர்பியா இனப் பிரச்னை தொடர்பான படங்கள் இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒன்றும் அந்த பிரச்னைக்கு ஆறுதல் சொல்லும் படங்களல்ல! நடந்த சிறு சிறு சம்பவங்களை தொடர்பாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வளவோ ஆண்டுகளாகியும் இன்னும் அந்த சம்பங்களின் பாதிப்பிலிருந்து அவர்களால் மீண்டுவரமுடியவில்லை என்பதையே இப்படங்கள் தொடர்ந்து வருவதிலிருந்து நாம் புரிந்து கொள்ளமுடிகிறது.

 

இந்த ஆண்டின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் 'Blue is the Warmest colour" தான்.  இந்த ஆண்டின் கான் திரப்பட விழாவில் விருதுபெற்ற இந்தப் படம் பரபரப்பாக பேசப்பட்டது. லெஸ்பியன் உறவை அடிப்படையாக கொண்ட இந்தத் திரைப்படம் விருதுக்கு தகுதியான படமே.

 

ஹோமோ செக்ஷுவல் படங்களை விட அதிகளவில் லெஸ்பியன் படங்கள் வருவதற்குக் காரணம் பொதுவாகவே பெண்கள் எந்த வயதிலும் தங்கள் தாயுடனோ, சகோதரியுடனோ அல்லது நெருங்கிய சிநேகிதிகளுடனோ உறங்கும் போது நெருக்கமாக படுத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோ ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தனது தந்தையுடனோ, சகோதரனுடனோ அல்லது நண்பர்களுடனோ அவ்வளவாக நெருக்கமாக பழகுவதில்லை. இதில் சதவிகிதம் நிறையவே வித்தியாசம் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

 

ஆனால் இந்தப் படம் லெஸ்பியன் உறவை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தாலும், நிறைய விஷயங்களை அலசும் படம், நுணுக்கமான ஆண் பெண் உறவைப் பற்றியும், பொதுவாக நாம் பேசிக்கொள்ளாத செக்ஸ் சார்ந்த உளவியல் பிரச்னைகளைப் பற்றிய உரையாடல்கள் நிறையவே வருகிறது.

 

ஆனால் லெஸ்பியன் படங்கள் எவ்வளவோ இதுவரை வந்திருக்கின்றன. இவ்வகையான படங்களை ஆண் இயக்குநர்களும், பெண் இயக்குநர்களும் எடுக்கத்தான் செய்கின்றனர். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நெருக்கமான காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் ஒரு ஆண் இயக்குநருக்கும், பெண் இயக்குநருக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை நன்றாக உணரமுடிகின்றது.

 

நன்றி ராஜேந்திரன்

.
மேலும்