டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் தமிழில் உள்ளது. ஒரிஜினல் - மலையாள படம்.
வெளிநாட்டில் உள்ள மணமகனுக்கு தன் தங்கையை திருமணம் செய்து கொடுக்க எல்லா பேச்சு வார்த்தை நடந்து, அதன் மூலம் மாப்பிள்ளை மச்சான் நட்பு உருவாகி, மாப்பிள்ளை தன் கடந்து கால காதல் மற்றும் காதலியை பற்றி பலவாறு பேசி, ஆற்றாமை தீர்த்து கொள்கிறார் மச்சானிடம்..
தெனாலிராமன் படத்தில் என்ட தெய்வ மச்சான் என்று பாசமழைக்கு ஏற்ப, இவர் அவரை பற்றி பெருமை பேச, அவர் இவரை பற்றி பெருமை பேச என்று நாட்கள் நகர்கிறது.
நிச்சயித்த பெண்ணை விட, மச்சான் உடன் அதிகமான உரையாடல்... மச்சான் ஆனந்த்- கோபக்காரன் - ஆத்திரம் படைத்தவன். எதற்கு எடுத்தாலும் சண்டைக்கு முன் நிற்கும் சுபாவம் படைத்தவன்.
மாப்பிள்ளை வினு - மச்சானின் திருமண வாழ்க்கை அறிந்து பிரிந்து வாழும் மனைவியை சமாதானம் பேசி இந்த கல்யாணத்தில் நீங்கள் இருந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும்.
குருவாயூர் கோயிலில் தான் இந்த திருமணம் இறைவனுக்கு அடுத்து நீங்கள் மிக முக்கியமானவர் என்று சொல்கிறார்.
அவரும் மனைவியிடம் பல கட்ட சமாதான நடவடிக்கைகளில் இறங்கி, மச்சானின் ஆலோசனையில் பேரில் பத்திரிகை வைக்கும் நாளில், மச்சான் அழைத்து, அவரே சில வசனங்கள் பேசி, மனைவியிடம் சொல்லி, வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
வெளிநாட்டில் இருந்து மச்சானுக்கு ஐபோனும்- அவரது மனைவிக்கு புடவையும் வாங்கி வருகிறார்.
அவரது வீட்டிற்கு சென்று மச்சானுக்கு பரிசை தந்து, அவரது மனைவியை நேரில் பார்க்கும் போது தான் கதை சூடு பிடிக்கிறது.
ஆம்... தன் முன்னாள் காதலி தான் தன் மச்சான் மனைவி... பார்வதி... அதன் பின்னர் என்ன ஆனது?
தன் திருமணத்தை செய்கிறாரா? இல்லையா?
மச்சானிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்கிறாரா? திருமணம் செய்ய போகும் பெண் அஞ்சலியிடம் என்ன சொன்னார்?
பார்வதி தன் கணவரிடம் உண்மையை சொன்னாரா?
போன்ற பல கேள்விகளுக்கு பதில்கள் இரு குடும்பத்தினர் செய்யும் லீலைகள், நண்பர்கள் செய்யும் வில்லத்தனம் என்று செம கலாட்டா தான். யோகி பாபு சில காட்சிகள் வந்து அடி வாங்கி செல்கிறார் கிளைமாக்ஸில்...
எல்லா கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை கச்சிதமாக செய்து உள்ளனர்.
ஒளிப்பதிவு, வசனம் எல்லாம் பிரமாதம்.
மலையாள ஹிரோயின்கள் இருவரும் அழகோ அழகு...
அய்யோடா...
பாருங்கள்... மகிழ்ச்சி அடையுங்கள்...