HBD நடிகை சரிதா

By News Room

தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார் நடிகை சரிதா. இவரை ‘மரோசரித்ரா’ என்ற படத்தில் பாலச்சந்தர் தான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்திற்காக 150 பேருக்கும் மேலாக டெஸ்ட் செய்தார் பாலசந்தர். அந்த டெஸ்ட்டில் பாஸ் செய்தது சரிதா தான். தனது முதல் படத்திலேயே தனி மேனரிஸம், முகபாவம், மற்றும் சிறப்பான நடிப்பால் தனி முத்திரை பதித்தார். ஆனால் படம் வெளிவந்த முதல்வாரத்திலும் படத்துக்கு முன்னதாகவும் ‘என்னப்பா ஹீரோயின் கருப்பா இருக்காங்க’ என்று கிண்டலும் கேலியும் செய்யப்பட்டதெல்லாம் தனிக்கதை.

 

தெலுங்கில் அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து பின்னர் ‘தப்புத்தாளங்கள்’ படத்தின் மூலம் தமிழிலும் இவரை அறிமுகம் செய்து வைத்தார் பாலச்சந்தர். அந்த படத்திலும் ஒரு அழுத்தமாக கதாபாத்திரத்தை மிகவும் அசால்ட்டாக கையாண்டு தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். நடிப்பையும் தாண்டி இவருக்கு இன்னொரு பிளஸ்ஸாக அமைந்தது இவரது குரல் தான். ஸ்ரீவித்யாவுக்கு இருக்கிற மெச்சூரிட்டி குரலும் ஸ்ரீதேவிக்கு இருக்கிற இன்னசெண்ட் குரலும் சேர்ந்த கலவையாக சரிதாவின் குரல் இருந்தது. 

 

ஹீரோயின் வயதை கடந்ததும் சினிமாவை சரிதா விடவில்லை. பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்க துவங்கினார். தமிழே வராத நக்மா, மதுபாலா போன்ற நடிகைகள் கூட இவரது குரலில் டப்பிங் பேசி நடித்ததால் அவர்களது நடிப்பு ஒருபடி இயல்பாக மாறியது. மேலும், ரோஜா, சௌந்தர்யா, தபு, சிம்ரன், தேவயானி, சினேகா என்று பல தமிழ் நடிகைகளுக்கு நடிகை சரிதா டப்பிங் பேசியிருக்கிறார்.

 

நடிகை சரிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில்தான் மேலும் இவர் 2 முறை திருமணம் செய்துகொண்டார் இவர் முதலில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சுப்பையா என்பவரை கடந்த 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே ஆண்டில் பிரிந்துவிட்டார்கள் பின்னர் 1988ம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு சிரவன் மற்றும் தேஜாஸ் என்ற 2 மகன்களும் பிறந்தார்கள்.

 

இந்த நிலையில் இவர் தனது கணவர் முகேஷை பிரிந்தாலும் அவருடைய மகன்கள் சிரவன் மற்றும் தேஜாஸ் இவருடன் தான் வசித்து வருகின்றார். இதில் சிரவன் 2018 ஆம் ஆண்டு வெளியான கல்யாணம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். ஆனால் இவருடைய இரண்டு மகன்களையும் பார்த்திருப்பது அரிது. இந்த நிலையில் தான் நடிகை சரிதாவின் இரண்டு மகன்களின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இறுதியாக 2013 ஆண்டு சிலோன் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது 10 ஆண்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் அயலான் மூலம் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

.
மேலும்