நடிகர் ரஜினிகாந்த் 73-ஆவது பிறந்த நாள் - ரசிகர்கள் உற்சாகம்

By Senthil

கோலிவுட்டின்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உ ற்சாகம் அடைஞ்சிருக்காய்ங்க 

ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளில், அவரது ரசிகர்கள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் ஆலயங்களில் வழிபாடு செய்தும்  கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில், இந்தாண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே கொண்டாடி வாராய்ங்க

அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரஜினிகாந்தின் தரிசனம் கிடைக்காதா என ஆர்வத்துடன் காத்து கிடக்கிறாய்ங்க

அதே சமயம்  ட்விட்டரில் #Thalaivar170,  #HBDSuperstarRajinikanth போன்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருது..

.
மேலும்