கமல்ஹாசனுடன் இணையும் சாய்பல்லவி

By Senthil

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் புதிய படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழில் தனுஷுடன் ‘மாரி 2’ & சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.
மேலும்