விஜயகாந்த், கமல்ஹாசன் நடிச்ச ஒரே படம்?

By Mini Cini

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், கமல்ஹாசனும் விஜயகாந்தும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான். 1986 ஆம் ஆண்டு வெளியான மணக்கணக்கு படத்தில் தான் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தின் காட்சி இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆர்.சி. சக்தி மற்றும் ரங்கராஜன் என இரு இயக்குநர்கள் இணைந்து இயக்கிய படம் அது. அந்த படத்தில் தான் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்தனர்.விஜயகாந்த், ராதா உள்ளிட்ட பலர் நடித்த அந்த படத்தில் கமல்ஹாசன் சினிமா இயக்குநர் போல கேமியோ ரோலில் நடித்து கலக்கி இருப்பார். அந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நன்றி: தமிழச்சி கயல்விழி

.
மேலும்