நகைச்சுவை நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், இது அவரின் 3-வது பட்டம் (degree) என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா ஆசையில் முத்துக்காளை தனது 18-வது வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வென்றார். இதையடுத்து, சினிமா மீது இருந்த காதலால் தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்தவர், சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் முத்துக்காளை. இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படித்தவர் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.