பிரபல நடிகருக்கு சிவாஜி கொடுத்த அட்வைஸ்!

By Mini Cini

தனக்கு போட்டி என்று சொல்லப்பட்ட ஒரு நடிகருக்கு சிவாஜி கணேசன், நேரில் அழைத்து அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், தனக்கு போட்டியாக வந்த ஒரு நடிகருக்கு அட்வைஸ் செய்தது குறித்து அந்த நடிகரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் கதையில் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். நடிப்புக்கு இலக்கணம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், இன்றைய கால நடிகர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.

நடிப்பு பல்கலைகழகம், நடிகர் திலகம் என பல அடைமொழிக்கு சொந்தக்காரராக இருக்கும் சிவாஜி கணேசனுக்கு நிகராக ஒரு நடிகர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் முத்திரை பதித்தவர். ஆனால் அவருக்கு போட்டியாக இவர் வந்துவிட்டார் என்று தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கூறிய நடிகர் தான் ராஜேஷ். பழம்பெரும் இயக்குனர் மகேந்திரனின் உறவினராக இவர், பல தமிழ் படங்களில் நடித்து இன்றைய கால நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

1974-ம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜேஷ், 1979-ம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்ற படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார். இவரது நடிப்பு அச்சு அசல் சிவாஜியை போலவே இருக்கும் என்று பலரும் கூறுவது உண்டு. இயக்குனர் மகேந்திரன் எழுதி பெரிய வெற்றிப்பெற்ற தங்கப்பதக்கம் படத்தின் படப்பிடிப்பின்போது, தொடர்ந்து 25 நாட்கள், பள்ளியில் இருந்து நேராக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவாராம் ராஜேஷ்.

அங்கிருந்து சிவாஜியை பார்த்து வளர்ந்த அவர், கன்னிப்பருவத்திலே படத்தில் நடித்தபோது, அவரை அழைத்து பாராட்டியுள்ளார். ஒருமுறை நேரில் சந்தித்தபோது, பாலும் பழமும் படத்தில் நடித்தபோது, சரோஜா தேவி இரும்பும்போது, தெர்மா மீட்டர் வைப்பது, காபி கொடுப்பது, போன் எடுப்பது என எப்படி அண்ணே இங்கிலீஷ் படத்தில் வருவது போல் நடித்தீர்கள் என்று என்று சிவாஜியை பார்த்து ராஜேஷ் கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சிவாஜி கணேசன், ஏன் நீ மட்டும் தான் நடிப்பியா நான் நடிக்க மாட்டேனா? எப்போவுமே உன்னையும் என்னையும் கம்பேர் பண்ணாத, நீ ஃபிலிம் ஆக்டர் நான் ஸ்டேஜ் ஆக்டர். நான் சத்தமாக நீண்ட வசனம் பேசுவேன். ஆனால் நீ குறைவாக பேசுவாய். உன் ஸ்கூல் வேற என் ஸ்கூல் வேற, அதனால் என்னையும் உன்னையும் கம்பேர் பண்ணாதே என்று கூறியுள்ளார்.

.
மேலும்