புதிய தோற்றத்தில் சூர்யா : 'கங்குவா' படத்தின் டீசர்

By News Room

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் டீசர் வெளியானது நேற்று வெளியானது. நடிகர் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படத்தினை இயக்குநர்  சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இதில், படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

 கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படம் 10 இந்திய மொழிகளில் 3டியில் வெளியாகிறது. அதுமட்டுமின்றி 'கங்குவா' திரைப்படம் மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு இடையே நடக்கும் கதை போல் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் முன்பே வெளியிட்டனர். அதில் சூர்யா இதுவரை இல்லாத ஒரு புதிய தோற்றத்தில் காணப்பட்டார்.

இந்நிலையில், படத்தின் டீசர் நேற்று வெளியீடப்பட்டது. அந்த டீசர் தான் தற்போது சோஷியல் மீடிக்களில் ரசிகர்களால் வேகமாக ஷேர் செய்யப்படுகிறது.

.
மேலும்