நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு புதிய குழப்பம்

By Senthil

நெல்சன் திலிப்குமார் டைரக்‌ஷனில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து உருவாக்கவுள்ள படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்குது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் தலைப்பை வைத்து தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று தொடங்கி படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருதாம்.இதனால், தமிழில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வெளியிடும் பொழுது, அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் அப்படீன்னு தெரிவிக்கிறாய்ங்க. 

அதே சமயம், மலையாளத்தில் வேறொரு தலைப்பில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகுமுன்னுன் சில சொல்ல ஆரம்பிச்சிருக்காய்ங்க

.
மேலும்