செய்தி வாசிப்பாளர் நடிகை மீரா கிருஷ்ணன்

By News Room

நடிகை மீரா கிருஷ்ணன் அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்.  தூதர்ஷன் தொலைக்காட்சி மற்றும் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிஉள்ளார்.

 

1998ல் AVM நிறுவனம் பொதிகை தொலைக்காட்சிக்காகத் தயாரித்த ஒரு பெண்ணின் கதை தொடர் மூலம் நடிக்கத் தொடங்கி புஷ்பாஞ்சலி, சொர்க்கம், மனைவி, கனா காணும் காலங்கள், கோகுலத்தில் சீதை, லெட்சுமி, வசந்தம், ஆண்பாவம் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

 

2002ல் நடிகர் ஷாம் நடித்த பாலா படத்தில் நாயகி மீராஜாஸ்மின்  அவர்களின் தாயாராக நடிப்பைத் தொடங்கி ஜங்ஷன், வசீகரா, இன்று முதல், காதல் கிசுகிசு, காதல் கிறுக்கன், வசூல் ராஜா MBBS,  எதிரி, முனி, சாணக்யா,  சண்டை,  நேபாளி, ஜெயங் கொண்டான், மரியாதை, குரு என் ஆளு, மாசிலா மணி, மிளகா, சீடன், சிறுத்தை, சிங்கம் புலி, திமிரு, தம்பிக்கோட்டை, சகுணி, நய்யாண்டி,  வேலையில்லாப் பட்டதாரி, வேதாளம், கீ, A1 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 

வீணை வாசிப்பதில் சிறந்தவர்.

பட்டம் போல என்ற திரை படத்தில் துல்கர் சல்மான் அவர்களுடன்  மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

 

சண்டைக் கோழி படத்தில் நடிகை மனோசித்ரா அவர்களுக்கும் அன்னியன் படத்தில் நடிகை ஸ்ரீரஞ்சனி அவர்களுக்கும் டப்பிங் குரல் தந்துள்ளார்.

.
மேலும்