நடிகையை கட்டியணைத்து நடிக்க கூச்சப்பட்ட நடிகர்?

By Mini Cini

அந்த காலத்தில் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராக வலம் வந்தவர் ஜெய் சங்கர். இவருடைய இயற்பெயர் சங்கர். இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத். 1965ம் ஆண்டு ‘இரவும் பகலும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜெய் சங்கர். இதனையடுத்து, இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்கள் இருந்தாலும், ஜெய்சங்கருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

ஜெய்சங்கர் குறித்து சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பேசுகையில், நடிகர் ஜெய்சங்கருக்கு ‘இரவும் பகலும்’தான் முதல் படம். இப்படத்தில் நடிகை வசந்தா நடித்துள்ளார். நடிகை வசந்தா இந்த படத்திற்கு முன் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், ஜெய்சங்கருக்கு இப்படம்தான் முதல் படம்.

இப்படத்தில் டூயட் பாடல் காட்சியாக்கப்பட்டது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நடிகை வசந்தாவை தொட்டு நடிக்க வேண்டிய கட்டாயம் ஜெய்சங்கருக்கு ஏற்பட்டது. அப்போது, ஜெய்சங்கருக்கு ரொம்பவே நடிக்க கூச்சப்பட்டார். வசந்தாவை தொடவே ரொம்ப யோசித்தார். இப்ப கூட அந்த படத்தில் உள்ள பாடலை பார்த்தாலும் ஜெய்சங்கர் ஏதோ மாதிரி போல் தான் அதில் இருப்பார்.

‘இரவும் பகலும்’ படம் பொங்கல் அன்று வெளியானது. அதோடு எம்ஜிஆரின் ‘எங்கள் வீட்டு பிள்ளை’ படமும், சிவாஜியின் ‘பழனி’ படமும் ஒன்றாகவே வெளியானது. மூன்றுமே வெற்றி பெற்றாலும் ‘இரவும் பகலும்’ படம்தான் அமோக வெற்றி பெற்றது என்றார்.

.
மேலும்