ஓம் ஶ்ரீ சாய் ராம்: கர்மங்களைக் குறைக்க என்ன வழி?

By News Room

ஸ்ரீ  ஷிர்டி சாயிபாபாவின் அருள்வாக்கு:

வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பூர்வஜென்ம கர்மவினைகளின்படியே நடக்கும். ஆனந்தமானாலும், துக்கமானாலும் மற்ற ஏதாகிலும் நிச்சயிக்கப்பட்டுள்ளவையே நடக்கும்.

நான் சாட்சியாய் மாத்திரமே இருப்பேன். நானாக எதையும் செய்ய மாட்டேன், யாரிட மும் எதையும் செய்விக்கவும் மாட்டேன். இருந்தாலும் அனைவரும் என்னையே பொறுப்பாளியாக்குகின்றனர். துன்பம் வந்தபோதுகூட என்மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும்.

கர்மவினையின் போக்கை யாராலும் தடுக்க முடியாது. பிராப்ததின் படி வருபவற்றை அனுபவிக்க வேண்டியதே. துன்பம் வந்தபோது அதைரியப்பட்டு தூரமாக விலகிப்போதல் அல்லது தற்கொலை செய்துகொள்ளுதல் போன்ற கொடுஞ்செயல்களுக்கு முற்படுவதால் மாத்திரம் கர்ம பந்தம் விலகிவிடாது. அதை அனுபவிக்க மீண்டும் பிறப்பது தப்பாது.

கர்மங்களைக் குறைத்துக்கொள்ள வழி, அவற்றைத் தைரியமாக அனுபவிப்பதே. நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண் டிருந்தால், என்பால் நம்பிக்கை கொண்டி ருந்தால், அவற்றை அனுபவிக்கும் சக்தி யை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற பாவனை உனக்கு  ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னில் இருக் கும் நானே அதைச் சுமக்கிறேன். என்னை மறந்தபோது துன்பம் ஏற்படுகிறது. நான் உன்னைச் சார்ந்தவன்.   

ஓம் ஶ்ரீ சாய் ராம்...

நன்றி விஜயராகவன்...

.
மேலும்