ஒரு நொடி - மூவி விமர்சனம்

By Mini Cini

ஒரு மிஸ்ஸிங் கேஸ், ஒரு கொலை கேஸ், அடுத்தடுத்து ஒரே ஸ்டேசனில் பதிவாக ஆய்வாளர் தமன் அதை எப்படி துப்பு துலக்குகிறார் என்பது தான் கதை.

 

திரைக்கதையின் ப்ளஸ் கிளைமாக்ஸ் என்றால் மைனஸ் மீதி மொத்தப்படமும் தான். 

 

முதல் சீனிலேயே படம் கதையினுள் நுழைந்து விட்டாலும் பாதிப்படம் போகும் போது ஒரு கொலை நடந்துவிட அதனால் மிஸ்ஸிங் கேஸ் அப்படியே மிஸ் ஆகிவிடுகிறது. அதன் பின் மீண்டும் மிஸ்ஸிங் கேஸ் விசாரணையை தொடரும் போது கதையை விட்டு ஆடியன்ஸ் வெளியே வந்துவிட்டதால் ஆடியன்ஸால் அதை தொடர முடியவில்லை. அட போங்கப்பா நான் ஃபாலோ பண்ணலை, நீங்களாக ஏதாவது பார்த்து செய்யுங்க என்ற மனநிலை நமக்கு வந்துவிடுகிறது.

 

ஒரு மிஸ்ஸிங் கேஸ், ஒரு கொலை கேஸ் இரண்டும் ஒரே நேரத்தில் வந்தால் மிஸ்ஸிங் கேஸ்க்கு தான் முக்கியத்துவம் தருவார்கள், அதுவும் மிஸ்ஸிங் கேஸில் சந்தேகத்துக்குறிய ஆட்களால் காணாமல் போனவர் உயிர் ஆபத்தில்  இருக்கும் போது, கொலை நடந்துவிடக்கூடாது என மிஸ்ஸிங் கேஸிற்கு தான் முக்கியத்துவம் தருவார்கள், ஆனால் இங்கே  கொலைக்கேசினுள் மூழ்கி போய்விட்டார்கள்.

 

படம் முழுக்க ரிப்பீட்டட் சீன்கள், கிரைம் திரில்லர் படங்களில் விசாரணையில் ஒருவரால் சொல்லப்பட்ட காட்சிகளை வேறு ஒருவர் மூலம் உறுதி செய்யும்போது கிட்டத்தட்ட அதே காட்சிகளை காட்டுவது  போர் அடிக்கிறது, இதற்கு வேறு உத்தியை பயன்படுத்தி இருக்கலாம்.

 

கிரைம் திரில்லர் படங்களில் படம் முழுக்க ஒரு புத்திசாலித்தனம் இருக்க வேண்டும், ஆனால் இதில் கிளைமாக்ஸ் மட்டும் தான் புத்திசாலித்தனம், மீதி எல்லாம் மக்கட்டையாக உள்ளது. குறிப்பாக மேக்கிங், படு சாதாரணமாக உள்ளது. சீன் கனெக்டிவிட்டி ஸ்மூத்தாக செல்லாமல் படக் படக் என தூக்கிப்போடுகிறது. இதன் விளைவு படத்தை விட்டு அடிக்கடி மெண்டலாக வெளியேறிவிடுகிறோம். கிரைம் திரில்லர், குறிப்பாக மிஸ்ஸிங் கேஸ்களில் அடுத்து என்ன என்ற பதைபதைப்பு நமக்கு ஒட்டிக்கொள்ள வேண்டும், அதற்கு சீன் மேக்கிங்கில் அந்த பதை பதைப்பை காட்ட வேண்டும், ஆனால் ஒரு ஸ்லோமோசனில் தமன் நடப்பதை வைத்து நமக்கு அதை கடத்த முடியாது.

 

தமன் நடிப்பு, ஐ ஆம் ஸாரி. ஆள் பார்க்க நன்றாக இருந்தாலும், போலிஸ் கேரக்டருக்கு ஃபிட்டான உடல் தோற்றம் இருந்தாலும் வேலராமமூர்த்தி உடன் சவால் விடும் காட்சிகள் எல்லாம் சகிக்கலை, அவ்வளவு செயற்கை. நல்லா நடிச்சிருக்கார்னும் சொல்ல முடியாம நல்லா நடிக்கலைன்னும் சொல்ல முடியாம கலவையா நடித்திருக்கார்.

 

யூகிக்க முடியாத கிளைமாக்ஸை மட்டும் எழுதிவிட்டு படம் எடுத்தால் போதாது, மொத்தமாகவும் படத்தை நன்றாக எடுக்க வேண்டும். முழு திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல கிரைம் திரில்லர் ட்ரீட் ஆக இருந்திருக்கும்.

 

டைம் கிடைச்சா பாருங்க, கண்டிப்பா படத்தை நிறுத்திட்டு போகத்தோணாது.

.
மேலும்