வாணி ஜெயராம் பத்மபூஷன் விருது

By cini mini

என்னுடைய இசை கடவுள் எம்.எஸ் விஸ்வநாதன்.. அவரை நான் பூஜிக்காத நாள் இல்லை..

காலையில் எழுந்தவுடன் அவரை வணங்கிவிட்டு, வேண்டிக்கொண்டு, அதேபோல் இரவு தூங்கப்போகும் போதும் அவரை நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் தூங்க போறேன்.. அப்படிப்பட்ட ஒரு மாமேதை.. மியூசிக்கல் ப்ரெயின்.,. அபார திறமை, அபார கம்போசிங்.. அதுபோல பார்க்கவே முடியாது..

அவருடைய இசையில் நிறைய பாடல்களை நான் பாடியது பாக்கியமாக நினைக்கிறேன்.. 'ஏழு ஸ்வரங்கள்' ரிக்கார்டிங்கில் பாடி முடித்ததுமே உனக்கு விருது கிடைக்கும்' என்றார்.. அதே போல அந்த பாட்டுக்கு தேசிய விருது கிடைச்சது .. 'இலக்கணம் மாறுதோ' ரிக்கார்டிங் முடிச்சிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்.. உடனே ராத்திரி 11 மணிக்கு எனக்கு போன் பண்ணி, 'அருமையா பாடியிருக்கேம்மா'ன்னு சொன்னார்.. அதெல்லாம் மறக்கவே முடியாது.. அப்படிப்பட்ட மேதையிடம் படிப்பு இருந்ததைவிட, பாராட்டும் குணமும் இருந்தது.. ஒரு சீனியர் கலைஞருக்கு இப்படி குணம் இருப்பது லேசப்பட்ட விஷயம் இல்லை..

அவர் குடும்பத்தில், அவர் மனைவி முதல் அனைவருமே அன்பாக என்னிடம் பழகுவார்கள்.. எம்எஸ்வி-யின் இசையில் எல்லாருமே மூழ்கிதான் போனார்கள்.. அவரது குடும்பம் மன்னர் குடும்பம்.. அவரது பாடல்களை மேன்மைப்படுத்திக் கொண்டே பல நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.. நானும் அதில் பல நிகழ்ச்சியில் பங்கேற்றியிருக்கிறேன்.. தான் ஒரு இசையமைப்பாளன், தான் ஒரு மேதை என்றெல்லாம் அவர் நினைத்து கொண்டது இல்லை.. அதனால்ன், நான் ஒரு ரசிகன் என்று அவர் எழுதிய புத்தகத்துக்கு பெயரை வைத்துள்ளனர்..

எப்பவுமே என்கிட்ட சொல்வார், உனக்கு உழைக்கதான் தெரியும், பிழைக்க தெரியாது என்பார்.. அவருக்கு எப்போதுமே இசை, இசை, இசை.. அதை தவிர வேறு எதுவுமே தெரியாது.. வெளி உலகமே இசை பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும்.. எப்போதுமே, இசை நினைப்பில் நடந்து கொண்டே இருப்பார்.. ஒரு இடத்தில் உட்காரவே மாட்டார்.. அவரது இசையில் பாடியதற்காக, என் வாழ்க்கையில் நான் நிறைய புண்ணியம் செய்திருக்கணும்' என்று நெகிழ்ந்து கூறினார் வாணி ஜெயராம்.

.
மேலும்