நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் பிரபு தேவா - வடிவேலு கூட்டணி..!

By Senthil

நடிகர் வடிவேலும், இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா இருவரும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், பிரபு தேவா இயக்கிய படங்களில் வடிவேல் நடித்தும் இருக்கிறார். இருவரும் இணைந்த பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் வடிவேலு ஒரு சிறப்பு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலுக்கு நடன இயக்குனராக நடிகர் பிரபு தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு ஜோடி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.  

.
மேலும்