எப்போதுமே விஜய்யின் நலம் விரும்பிதான்: ரஜினிகாந்த்

By News Room

'லால் சலாம்' பட விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் நடிகர் விஜய் குறித்து பேசும் போது, காக்கா - கழுகு கதையை விஜய்யை தாக்கி பேசியதாக பலரும் தவறாக நினைத்துக் கொண்டார்கள். அது என்னை ரொம்பவே வேதனையடைய செய்தது. நான் எப்போதுமே அவரின் நலம் விரும்பிதான்.

 

நான் பார்த்து வளந்த பையன் அவர், தர்மத்தின் தலைவன் சூட்டிங் விஜய் வீட்டில் தான் நடந்தது. அப்போது அவர் சினிமா ஆசையை கூறினார். அதற்கு நான் நீங்க முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என கூறினானே. பின் நாட்களில் அவரின் கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்து இருக்கிறார். தற்போது அரசியலிலும் வர இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார். 

 

"நான் எனக்கு விஜய்தான் போட்டி என சொன்னால் எனக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். விஜய், எனக்கு ரஜினிதான் போட்டி என சொன்னால் அவருக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். நான் எப்போதுமே விஜய்யின் நலம் விரும்பிதான் என மேடையில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

.
மேலும்