ஸ்ரீகாந்த் நட்டி பூர்ணா ஆகியோருடன் ரங்கராஜ் பாண்டே இணையும் ‘சம்பவம்’

By Senthil

மாநிலங்களவையில்  அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள் கனிமொழிஎன்விஎன் சோமு உள்பட 19 எம்.பி.க்களை ஒருவாரம்  இடைநீக்கம் செய்து மாநிலங்களவை துணைத்தலைவர் உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், மற்றும் சோனியா, ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இந்த கூட்டத்தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது.

இன்றும் மாநிலங்களவையில் திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு குறித்து அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர்.

இதையடுத்து, மாநிலங்களவையை நடத்திய துணை சபாநாயகர் திமுக உறுப்பினர்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் உட்பட 19  பேரை ஒருவாரம்  சஸ்பெண்ட் செய்தார்.  மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

.
மேலும்