நடிகை ராஷ்மிகா மந்தனா வைரல் புகைப்படம்

By Senthil

நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

இந்தப் படத்திற்கு பிறகு ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார். இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம்  நடித்து தமிழ்த் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். 

சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

நடிகை ரஷ்மிகாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில், ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது மிகவும் வித்தியாசமாக, கூர்க் பகுதியின் பெண்கள் அணியும் பாரம்பரிய சேலையான 'கொடவா' சேலையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் பரவலாக சமூக வலைதளங்களில் பகீரப்பட்டு வருகின்றன.

.
மேலும்