சீரியசான கதை 'பாட்டல் ராதா'!

By Mini Cini

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பாட்டல் ராதா'.

 

அறிமுக இயக்குனர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரூபேஷ் ஷாஜி.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

 

நடிகர் குருசோமசுந்தரம், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன், ஆண்டனி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

குடிக்கு அடிமையாகும் மனிதர்களைப் பற்றிய   சீரியசான கதைக்கருவுடன்   முழுக்க நகைச்சுவை நிறைந்த படமான பாட்டல்ராதா  டிசம்பர் மாதம் 20 ம் தேதி உலகெங்கிலும்  வெளியாகவிருக்கிறது

.
மேலும்