'லா லா நந்தலா' பாட்டு பெரிய பிரேக் - பாடகி கல்பனா!

By Mini Cini

மியூசிக் டைரக்டரின் மகளாக இருந்தாலும், 'எல்லா இடத்திலும் உனக்கான திறமையை மட்டுமே சொல்லி உன்னை அடையாளப் படுத்திக்க'னு அப்பா சொல்வார். சின்ன வயசுல நிறைய மேடைக் கச்சேரிகளில் பாடிப் பாடியே எனக்கான அடையாளத்தை தக்கவெச்சுகிட்டேன். தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தாலும், எனக்குப் பெரிய ஆர்வமில்லை.

காலேஜ் படிக்கிறப்போ, மணிசர்மா சார்கூட கொஞ்ச காலம் வொர்க் பண்ணினேன். அடுத்தடுத்து தேவிஶ்ரீ பிரசாத், கீரவாணி உள்ளிட்ட முன்னணி தெலுங்கு இசையமைப்பாளர்களுக்கு முந்நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடினேன்.

தமிழில் 'நரசிம்மா' படத்தில் பாடின 'லா லா நந்தலா' பாட்டு பெரிய பிரேக் கொடுத்துச்சு.''கடவுள் தந்த அழகிய வாழ்வு', 'காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே', 'பெண்ணே நீயும் பெண்ணா', 'ஒரு சின்ன வெண்ணிலா போலே', 'மதுரை ஜில்லா மச்சம்தாண்டா', 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு', 'டார்லிங் டம்பக்கு', 'ஓயா ஓயா' என நிறைய சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு என இதுவரைக்கும் ஆயிரத்து ஐநூறுப் பாடல்களைப் பாடியிருக்கேன்." கல்யாண வாழ்க்கை கொஞ்ச காலத்திலேயே விவாகரத்தில் முடிஞ்சது. அப்போ மனசு உடைஞ்சு அழுகையே கதின்னு இருந்ததால், என்னைப் பலரும் மறந்துட்டாங்க. பாடல் வாய்ப்புகள் இல்லாம, ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ நடந்த, ஒரு மலையாள சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன்.

அதில் ஜெயிச்சு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசா வாங்கினேன். அது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. அந்தக் கஷ்டமான வாழ்க்கைப் போராட்டத்தில் தற்கொலை முயற்சிக்குப் போயிருக்கேன்.

இந்த அழகிய வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டதும் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன். வைதேகி காத்திருந்தாள்', 'சிந்து பைரவி',' நீ வருவாய் என' எனப் பல படங்களில் அப்பா நடிச்சிருக்கிறார். 'தாயே நீயே துணை', 'சர்வம் சக்தி மயம்' என சில படங்களில் அப்பாவும் நானும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.

இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராவும், நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் அப்பா பாடியும் இருக்கார். 'தியாகச் சாலை', 'தேன் சிட்டுக்கள்' எனப் பல படங்களுக்கு இசையமைப்பாளரா வொர்க் பண்ணியிருக்காரு.

மியூசிக் ஃபீல்டுல இருந்தவங்களுக்கு அப்பாவை நல்லாத் தெரியும் என்று கூறிய அந்த பாடகி, "கடவுள் தந்த அழகிய வாழ்வு. உலகம் முழுதும் அவனது வீடு. கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு" என தன் மெல்லியக் குரலால் பாடி நம்மை நெகிழ வைத்த கல்பனா…. அந்த பாடகியின் தந்தைதான் இசைஅமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகனம் கொண்ட T.S.ராகவேந்தர்.

.
மேலும்