தொடர்ச்சியாக இரண்டு படங்களில் செஞ்சுரி அடிச்ச சிவா

By Senthil

சிவகார்த்திகேயன் நடிச்ச ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’டான்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் செஞ்சுரி அடிச்சிப்புட்டார்.

ஐந்தே நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த டான் படம் மிக விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந் நிலையில் லைகா நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் 12 நாட்களில் ’டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தொடர் செஞ்சுரி அடிச்சிருக்கார்.

மாஸ் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களே எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் தொடர்ச்சியாக 100 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருப்பது பேசு பொருளாகி இருக்குது

.
மேலும்