ரஜினி தலைப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

By Senthil

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். 

இவர் இதற்கு முன்பு கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு மாவீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

.
மேலும்