நடிகர் சூர்யா நடிக்கும் படபிடிப்பு தளத்தில் விபத்து - வைரலாகும் சூர்யாவின் உருக்கமான பதிவு

By Senthil

நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் படம் கங்குவா. இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதில், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

சரித்திர கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். அதில், சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, இவ்விபத்துக்கு பிறகு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்பார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு, சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிறப்பாக உணர்கிறேன்.. உங்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.

.
மேலும்