2k கிட்ஸ்களுக்கான வெப் சீரியஸ் " தலைமைச்செயலகம்'!

By News Room

த்ரில்லர் சஸ்பென்ஸ்!

ஆல்பம் தொடங்கி அநீதி வரை வசந்தபாலனின் படம் எல்லாம் பார்த்திருக்கிறேன்.

 

தலைமைச்செயலகம் எதிலும் சேராத இந்தக் காலத்திற்கான புத்தாயிரம் 2k கிட்ஸ்களுக்கான வெப் சீரியசாக மட்டுமில்லாமல் அனைவரும் விரும்பும் வண்ணம்,  வெளிவந்திருக்கின்றது. இது வெப் தொடராக  இன்று Zee5 OTT தளத்தில் வெளியாகி இருக்கின்றது.

 

முதல் அத்தியாயத்திலேயே கதை சென்னைக்கும் ஜார்கண்டிற்குமாக பரபரக்கிறது. எதிர்பாராத சஸ்பென்ஸ் முடிச்சுகளைக் கொண்டதாக இருக்கிறது வசந்தபாலனின் தலைமைச்செயலகம். 

 

வைட்ஆங்கிள் ரவிசங்கர் வெப்தொடரை fresh ஆக feel செய்ய வைக்கிறார். ரவிக்குமாரின் எடிட்டிங் சசிகுமாரின் கலை இயக்கம் ஜிப்ரானின் இசை மிரட்டுகிறது.

 

கிஷோர், ஸ்ரேயாரெட்டி,சந்தானபாரதி, பரத்,கவிதாபாரதி, ஷாஜிசென், ஒய்.ஜி.மகேந்திரா,ரம்யா நம்பீசன்,தம் நடிப்பால் தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனம் தொடரை தயாரித்திருக்கிறது.

 

வசந்தபாலன் சார் தலைமைச்செயலகத்தை வென்று விட்டீர்கள்.நல்வாழ்த்துகள்.

-இரா.தெ.முத்து

Vasanta Balan

.
மேலும்