தலைவர் 169 படம் ஆகஸ்டில் படப்பிடிப்பு - பொங்கலுக்கு ரிலீஸ்’!

By News Room

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இவர் தற்போது விஜயை வைத்து படம் எடுத்து முடித்துள்ளார். இதனிடையே, நடிகர் ரஜினியை வைத்து 169 வது படமாக உருவாகும். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தநிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘ரஜினி 169’ படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

.
மேலும்