நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை இயக்குநர் நெல்சனுக்கு முடித்து கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் தற்போது ரசிகர்களால் அன்பாக வர்ணிக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதில் விஜய்க்கு ராஷ்மிகா சுற்றிப்போடும் போன்ற புகைப்படங்கள் மற்றும் பூஜை புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன.