தளபதி 66 பர்ஸ்ட் லுக்கை வெளியீடு

By Senthil

நடிகர் விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ். பிரபு. ஷாம் உள்ளிட்ட மேலும் நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தி பாஸ் ரிட்டன்ஸ் என்ற கேப்ஷனுடன் வெளியான போஸ்டரில், விஜய் ஸ்டைலாக கோட் சூட்டில் மிளிர்கிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் வெற்றி என இப்போதே கொண்டாடி வருகிறார்கள்.

.
மேலும்