தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஷால் சார் யுவன் சார் கூட்டணி வீரமே வாகை சூடும் "எங்கே உன்னை எங்கே தேடுவேன் இனி எங்கே உன்னை எங்கே காணுவேன்" என்ற பாடலும் மற்றும் விஷ்ணு விஷால் சார் .இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில். TR சிலம்பரசன் சார் அவர்கள் பாடிய FIR யார் என யார் என உலகம் கேட்க இவன்யாரென அறிந்திட்டு பகைவர் வேர்க்க போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்கநர வேட்டை துவங்குதே" என்ற பாடலும் இரு படங்களிலும் பாடல் எழுதி பாடலாசியர் கருணாகரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
கோவிட் காலத்தில் வெளியான எனது முந்தைய படங்களான மாஸ்டர், சைலன்ஸ், சக்ரா, ஜெயில், தூநேரி ஆகிய படத்தில் என் பாடலுக்குத் தந்த உங்கள் ஆதரவுகக்கு நன்றியும் தற்போது வெளியான இரு படங்களுக்கு உங்கள் ஆதரவை நாடி வந்துள்ளேன் .
என் முதல் படமான வல்லவனின் தொடங்கிய உங்கள் அன்பு இன்றுவரை எனக்கு தேம்பை தருகிறது
திரைக்குப் பின்னால் நின்று வேலை செய்யும் படைப்பாளியின் முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பிரம்மாக்கள் நீங்கள் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியையும் அன்பையும் காணிக்கையாக்குகிறேன் நன்றி என அதில் தெரிவித்துள்ளார்.