சிவாஜிக்கு நான் செய்த கொடுமை !

By News Room

சிவாஜிக்கு நான் செய்த கொடுமை ! - இயக்குனர் A.C.திருலோகசந்தர் 

      நான் பழகிய நண்பர்களில் மிகவும் இனிமையானவர் எனது அருமை நண்பர் சிவாஜி கணேசன் தான்.

    அவர் ஒரு லட்சிய மனிதர். மங்காத ஒளியுடைய கோகினூர் வைரம். அன்பின் எல்லைக்கோடு.

    அந்த உத்தமருக்கு நான் பல சோதனைகளை இழைத்து விட்டேன். என் உயிருக்குயிரான அந்த நண்பருக்கு பல வேதனைகளை சுமக்க வைத்தேன். எனது கல் நெஞ்சில் உதித்த கற்பனையால் அந்த இனியவர் தாங்கிய துயரங்கள் தான் எத்தனை !

       ருமானி மாம்பழத்தின் தோலைப் போன்ற மாசுமருவற்ற முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்த வேண்டும். நீண்டு உயர்ந்து நிற்கும் மூக்கில் வளைவுகளை ஏற்படுத்த வேண்டும். அந்த அழகிய முகத்தை கோரம் ஆக்க வேண்டும் , என்றெல்லாம் எனது கல் மனத்தில் உறுத்திய கற்பனைகளின் விளைவாக "தெய்வமகன்" படத்தில் கொடூரமான தோற்றத்தில் உருமாறினார் சிவாஜி.

        முகத்திலே தீயிட்டதை போன்ற ஒரு எரிச்சல் ! ஒப்பனை தொடங்கியது முதல் , நடித்து முடித்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும் வரை எதையும் உண்ணவும் முடியாது. வாய் விட்டு சிரிக்கவும் முடியாது. அப்படியொரு பரிதாப நிலைக்கு நான் சிவாஜியை ஆளாக்கி விட்டேன்.

      ஆனால் அந்த கலை மகனோ கேமரா சுழன்றதும் எல்லா வேதனைகளையும் மறந்து உணர்ச்சி பொங்க நடித்துக் கொண்டிருப்பார்.இதை பார்க்க என் கல் மனமும் உருகும் , எனினும் உள்ளத்து வேதனைகளை எல்லாம் வெளிக்காட்டாமல் எனது வேலைகளை செய்து முடிப்பேன்.

   பத்திரிக்கை பதிப்பில் இருந்து ....

#Ithayakkani

.
மேலும்