தி லெஜண்ட்’ திரைப்படம் ஜூலை 28-ல் ரிலீஸ்!

By Senthil

‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி.என்.அன்புச்செழியன் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுகிறார்.

தி லெஜண்ட்’ சரவணன் தயாரித்து நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான, சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்.

.
மேலும்